சித்திரை திருவிழா


சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 3 May 2023 7:30 PM GMT (Updated: 3 May 2023 7:30 PM GMT)

ஆண்டிப்பட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டியில் உள்ள அன்னை முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேனி

ஆண்டிப்பட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டியில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அன்னை முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று முன்தினம் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். இரவு மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி தினமும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story