மாவட்டத்தில் 46 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்


மாவட்டத்தில் 46 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்
x

ஈரோடு மாவட்டத்தில் 46 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நேற்று நடந்தது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 46 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நேற்று நடந்தது.

காய்ச்சல் தடுப்பு முகாம்

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருவதால் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் பரவி வருகிறது. இதன் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்பேரில் மாநிலம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நேற்று முதல் தொடங்கி உள்ளது.

இதில், ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்கள், நகரப்பகுதிகளில் என மொத்தம் 46 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் வில்லரசம்பட்டி, ராயபாளையம், வெண்டிபாளையம், ஈ.பி.பி. நகர் உள்ளிட்ட 4 இடங்களிலும் நடந்து வருகிறது. இந்த முகாமில் லேசான காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களுக்கு முதல் நிலை சிகிச்சைகளும், தீவிர காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.

நடமாடும் மருத்துவ குழு

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் கூறும்போது, 'ஈரோடு மாநகராட்சியில் 4 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்து வருகிறது. இன்று (திங்கட்கிழமை) நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் நடக்கிறது. ஒரு வாரத்திற்கு இந்த முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நடமாடும் மருத்துவ குழுவினரும் ஆங்காங்கே காய்ச்சல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிர காய்ச்சல் இருப்பவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல பரிந்துரைப்போம். தேவை ஏற்பட்டால் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அதன் முடிவுகள் அடிப்படையில் சிகிச்சை அளிப்போம்' என்றார்.


Next Story