வேளாண்மைத்துறை சார்பில் வயல் விழா


வேளாண்மைத்துறை சார்பில் வயல் விழா
x

முள்வாய் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் வயல் விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தை அடுத்த முள்வாய் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் வயல் விழா நடந்தது. விழாவுக்கு உதவி இயக்குனர் அனுராதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா சவுந்தர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு விவசாய இடு பொருட்டுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் விரிஞ்சிபுரம் வேளாண் ஆரய்ச்சி மைய விஞ்ஞானி டாக்டர் கோபிகிருஷ்ணா கலந்துகொண்டு இயற்கை விவசாயம், விதை நேர்த்தி முறைகள், உழவன் செயலி பதிவேற்றம், இடுபொருட்கள் முன்பதிவு, பண்ணைக் கருவிகள் தொகுப்பு, நெல், பருத்தியில் ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூல் பெறுதல் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து வேளாண்மை அலுவலர்கள் செல்வமூர்த்தி, ஹேமந்த் குமார், பிரதீஸ்வரன், மோகன் சுந்தரம், ஜெயா வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் நீலமேகம், உதவி வேளாண்மை அலுவலர்கள் முரளி, சுதாகர் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா பழனி, ஒன்றிய கவுன்சிலர் சுமதி, கால்நடை டாக்டர் புவனேஷ்வர் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story