52 துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம்
தஞ்சை மாவட்டத்தில் 52 துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகளை இடமாற்றம் செய்து கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் 52 துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகளை இடமாற்றம் செய்து கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகள் இடமாற்றம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகளை இடமாற்றம் செய்து கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம்செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய வரதராஜன், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய ராஜரத்தினம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவிடைமருதூர் ஒன்றியத்தில் பணியாற்றிய புவனேஸ்வரி கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய நாகராஜன் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்துக்கும், திருப்பனந்தாளில் பணியாற்றிய விஜயகுமார் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கும்பகோணம்- ஒரத்தநாடு
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய மோகன்குமார் ஒரத்தநாடு ஒன்றியத்துக்கும், ஒரத்தநாட்டில் பணியாற்றிய தனசேகர் திருவோணம் ஒன்றியத்துக்கும், திருவோணத்தில் பணியாற்றிய இளையராஜா தஞ்சை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு கண்காணிப்பாளராகவும்,மாற்றப்பட்டு உள்ளனர். மணிகண்டன் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கும், அம்மாப்பேட்டையில் பணியாற்றிய துர்காசெல்வன் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய சின்னப்பா பூதலூர் ஒன்றியத்துக்கும், பூதலூரில் பணியாற்றிய வெங்கடேசன், பூதலூர் ஒன்றியத்தில் தணிக்கை பிரிவுக்கும், இங்கு பணியாற்றிய விஜயலட்சுமி திருவையாறு ஊராட்சி ஒன்றியத்துக்கும், திருவையாறில் பணியாற்றிய ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பட்டுக்கோட்டை- அம்மாப்பேட்டை
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய ஜெயந்தி, திருவையாறு ஊராட்சி ஒன்றியத்துக்கும், திருவையாறில் பணியாற்றிய பாரதி தஞ்சை ஒன்றியத்துக்கும், தஞ்சை ஒன்றியத்தில் பணியாற்றிய வினோதினி தஞ்சை மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கும், . இங்கு பணியாற்றிய வாசுகி அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய ஹேமமாலினி ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்துக்கும், ஒரத்தநாட்டில் பணியாற்றிய சுரேஷ் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கும், சேதுபாவாசத்திரத்தில் பணியாற்றிய லாசர்ரத்தினசாமி பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய ஆண்டனி ஜான்பிரிட்டோ பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்துக்கும், பேராவூரணியில் பணியாற்றிய சக்திநாதன் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவையாறு- மதுக்கூர்
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய கண்ணன், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கும், பட்டுக்கோட்டையில் பணியாற்றிய பழனியம்மாள் திருவையாறு ஊராட்சி ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய கந்தசாமி பூதலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும், பூதலூரில் பணியாற்றிய கார்மேகம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும், மதுக்கூரில் பணியாற்றிய நித்யா பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய முத்துசெல்வி, தஞ்சை ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய மகாலட்சுமி, அம்மாப்பேட்டை ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய நவநீதம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய கண்ணன் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய கவிதா திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய ஞானவேல் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய சந்திரபோஸ் தஞ்சை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்துக்கும், இங்கு பணியாற்றிய நிர்மல் சகாயராஜ் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய சாமிநாதன், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய ரத்தினகுமார் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய கண்ணன் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பேராவூரணி- சேதுபாவாசத்திரம்
மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய பானுமதி சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய மாணிக்கவாசகம், அதே ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், இங்கு பணியாற்றிய முருகேசன் மதுக்கூர் ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய சீதா பேராவூரணி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய ரெங்கராஜன் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய ஆறுமுகம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய திருப்பதி பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய வீரமணி ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய அச்சுதராமன் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய அரவிந்தன் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய அருளாளன் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.