ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடும் மோதல், நாற்காலிகள் வீச்சு


ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ேமாதிக்கொண்டனர். நாற்காலிகள் வீசப்பட்டன. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் காயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ேமாதிக்கொண்டனர். நாற்காலிகள் வீசப்பட்டன. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் காயம் அடைந்தனர்.

ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அளவிலான அ.தி.மு.க. சார்பில் ஒற்றை தலைமை என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்றது.

மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், நகர் செயலாளர் பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் மருதுபாண்டியன், அசோக்குமார், கருப்பையா, ஜானகிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மோதல்-நாற்காலிகள் வீச்சு

இந்த கூட்டம் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென கூட்ட அரங்கில் இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ். வாழ்க என்றும், ஒற்றை தலைமையை ஏற்க மாட்டோம் எனவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கோஷத்தை தொடர்ந்து அங்கு போடப்பட்டு இருந்த நாற்காலிகளை தூக்கி, மேடையை நோக்கி சரமாரியாக வீசி எறிந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிதடி, மோதல் உருவானது. ஒருவரை ஒருவர் நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கிக்கொண்டனர்.

2 பேர் படுகாயம்

இதில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான ராமநாதபுரம் அருகே உள்ள இடையர்வலசை பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் மணிபாரதி (வயது 40), மற்றொரு நிர்வாகி புத்தேந்தல் சந்திரன் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ், தியாகராஜன் ஆகியோரும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

மணிபாரதி, சந்திரன் ஆகியோர் உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் திருமண மண்டபத்துக்கு வெளியே சென்றும் நாற்காலிகளால் தாக்கிக்கொண்டனர்.

கார் கண்ணாடி உடைப்பு

அப்போது கல்வீசப்பட்டதில் காரிக்கூட்டம் அ.தி.மு.க. நிர்வாகி சாதிக்பாட்சா என்பவரின் கார் கண்ணாடி உடைந்தது. இதனால் அந்த சாலை பகுதியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்மானம்

பின்னர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. கட்சியை வழிநடத்த, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய ஒற்றைத்தலைமையாக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே கூட்டத்தில் மோதலை தூண்டியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கண்டித்தும், அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சி தலைமையை வலியுறுத்தியும் தீர்மாம் நிறைவேற்றினர்.

மணிகண்டன் விளக்கம்

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:-

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மேற்கண்ட ஆலோசனை கூட்டத்திற்கு எனக்கு எந்தவித அழைப்பும் வரவில் லை. நா னும் அந் த கூட்டத்தில் கலந்துகொ ள் ளவில் லை. அப்படி இரு க்கும்போது அங்கு நடைபெற்ற வன்முறைக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். அவ்வாறு பார்த்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பல கூட்டங்களில் இதுபோன்ற மோதல் சம்பவங்கள் நடந்துள்ள ன. அத ற்கும் நா ன்தா ன் பொ றுப் பா? இ தை நா ன் முறைப்படி எதிர் கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story