ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல்


ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 29 Sep 2023 6:45 PM GMT (Updated: 29 Sep 2023 6:46 PM GMT)

கோர்ட்டில் நடைபெறும் வழக்குகளில் ஆன் லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்
கோவை


கோர்ட்டில் நடைபெறும் வழக்குகளில் ஆன் லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தெரிவித்தார்.


செல்போன் ஒப்படைப்பு


கோவை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.39½ லட்சம் மதிப்பிலான 200 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கலந்து கொண்டு உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத் தார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


கோவையில் கடந்த 1½ ஆண்டுகளில் ரூ.2½ கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கோவையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 34 கொலை நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 349 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 469 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


போக்சோ வழக்குகள்


கோவையில் இதுவரை ரூ.33 லட்சம் கஞ்சா சாக்லெட்டுகள், ரூ.4 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட 3 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 433 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். லாட்டரி சீட்டுகள் விற்ற 355 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 78 ஆயிரம் கைப்பற்றப்பட்டு உள்ளது.


கோவையில் நடப்பாண்டில் இதுவரை 569 திருட்டு வழக்குகளில் 415 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.4 கோடியே 78 லட்சம் நகை, பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. கோவையில் இதுவரை 153 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 120 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 134 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


8543 பேர் கைது


புராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டம் மூலம் நடப்பாண்டில் 10 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர் குற்ற செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளை வித்த 31 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை பல்வேறு குற்ற வழக்குகள் சம்பந்தமாக 7,519 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 8543 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் இனி குற்ற வழக்குகளின் குற்றப்பத்திரிகை ஆன்லைன் முறையில் (இ-பைலிங்) நாளை (இன்று) முதல் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.



Next Story