சினிமா இயக்குனரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை


சினிமா இயக்குனரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை
x

சேலத்தில் ஆபாச படம் எடுத்த வழக்கில் கைதான சினிமா இயக்குனரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சேலம்

சூரமங்கலம்:-

சேலத்தில் ஆபாச படம் எடுத்த வழக்கில் கைதான சினிமா இயக்குனரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஆபாச படம்

எடப்பாடி அருகே உள்ள வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (வயது 38). சினிமா பட இயக்குனரான இவர், இளம்பெண்களை நடிகை ஆக்குவதாக ஆசைவார்த்தை கூறி ஆபாச படம் எடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்சத்ரியன் மற்றும் அவரது பெண் உதவியாளர் ஜெயஜோதி ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே பெண் உதவியாளர் ஜெயஜோதியை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், சினிமா வாய்ப்பு கேட்டு வந்த பல பெண்களுடன் வேல்சத்ரியன் உல்லாசமாக இருந்ததும், பெண் உதவியாளருடன் அவர் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோர்ட்டில் மனுதாக்கல்

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த 400-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் வேல்சத்ரியனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட பெண்களிடம் நேரடியாக அல்லது போன் மூலம் புகார் பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சினிமா இயக்குனர் வேல்சத்ரியனை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் சேலம் கூடுதல் மகளிர் விரைவு நடுவர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இதனால் வேல்சத்ரியனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் தான், சினிமா வாய்ப்பு கேட்டு வந்த எத்தனை பெண்களை அவர் ஏமாற்றி உள்ளார்? என்பன உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story