சமயபுர மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா


சமயபுர மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
x

கிருஷ்ணகிரியில் சமயபுர மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பழையபேட்டை சமயபுர மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி பல்வேறு பூஜைகள், நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை 5 மணி முதல் கோவில் வளாகத்தில் பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். காலை 9 மணிக்கு ஏராளமான பெண்கள் மா விளக்கை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்று சாமிக்கு படைத்து வழிபட்டனர். இதையொட்டி சமயபுர மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இரவு 7 மணிக்கு விளையாட்டு நிகழ்ச்சி நடந்தன.


Next Story