இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை
விழுப்புரம் அரசு கல்லூரியில் இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை
விழுப்புரம்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் மொழி பாடப்பிரிவுகளில் எஞ்சியுள்ள இடங்களை நிரப்புவதற்காக இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இணையதளம் மூலம் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டும் மாணவர் சேர்க்கையில் பதிவு செய்ய முடியும். அதன்படி நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பி.எஸ்சி. அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும். 24-ந் தேதி(சனிக்கிழமை) பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம். பாடப்பிரிவுகளுக்கும், 28-ந் தேதி(புதன்கிழமை) காலை 10 மணிக்கு பி.எஸ்சி. அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கையும், 29-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பி.ஏ., பி.காம். பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும். கல்லூரி வளாகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். சேர விரும்பும் மாணவர்கள் அதனை பூர்த்தி செய்து சாதிச்சான்றிதழ் நகல், 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் ஆகியவற்றை இணைத்து கல்லூரியில் சமர்பிக்க வேண்டும். இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை விண்ணப்பம் பதிவு செய்தவர்கள் மட்டுமே மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள முடியும். இந்த தகவலை கல்லூரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.