கார் கவிழ்ந்து நிதி நிறுவன அதிபர் பலி


கார் கவிழ்ந்து நிதி நிறுவன அதிபர் பலி
x

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே கார் கவிழ்ந்து நிதி நிறுவன அதிபர் பலியானார். அவரது 3 மகள்கள் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே கார் கவிழ்ந்து நிதி நிறுவன அதிபர் பலியானார். அவரது 3 மகள்கள் படுகாயம் அடைந்தனர்.

நிதி நிறுவன அதிபர்

கோவில்பட்டி வீரபாண்டி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 42). இவர் மோட்டார் வாகனங்களுக்கான நிதிநிறுவன அதிபர் ஆவார். நேற்று இவர் கோவில்பட்டியில் இருந்து மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது மகள்கள் ஜீவிதா நாச்சியார் (12), பிரியதர்ஷினி (10), சங்கவி (8) ஆகியோருடன் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அவரே காரை ஓட்டி வந்தார்.

இந்த கார் விருதுநகர் சாத்தூர் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் எதிரே வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தடுப்பு வேலியை தாண்டி ரோட்டில் கவிழ்ந்தது.

பலி - 3 பேர் படுகாயம்

இதில் காரை ஓட்டி வந்த நிதி நிறுவன அதிபர் கிருஷ்ணமூர்த்தி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த அவரது 3 மகள்களும் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சூலக்கரை போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 3 சிறுமிகளையும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மனவேதனை

இதுபற்றி காயமடைந்த சிறுமி ஜீவிதா நாச்சியார் கூறுகையில், ஊரிலிருந்து கிளம்பும் பொழுது எனது தாயாரையும் என் தந்தை கிருஷ்ணமூர்த்தி அழைத்தார்.

ஆனால் எனது தாயார் வர மறுத்துவிட்ட நிலையில் அவர் இந்த விபத்திலிருந்து தப்பிவிட்டார். ஆனாலும் எங்கள் கண்முன்னே தந்தை பலியாகி விட்டார். இது மிகுந்த மன வேதனை அளிக்கிறது என கூறினார்.


Related Tags :
Next Story