போலீசாரின் குடும்பத்திற்கு நிதி உதவி
குமாரபாளையத்தில் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
நாமக்கல்
பள்ளிபாளையம்
குமாரபாளையத்தில் உயிரிழந்த போலீசார் குடும்பத்திற்கு சக போலீசார் நிதி வழங்கினார்கள். இது பற்றி குமாரபாளையம் போலீசார் கூறியதாவது:- 1999-ம் ஆண்டு பயிற்சி முடித்த பேட்ச் போலீசார் உதவும் உறவுகள் எனும் அமைப்பை ஏற்படுத்தி உள்ளோம். இந்த குழுவில் போலீசார் யாராவது இறந்தால், இறந்தவர் குடும்பத்திற்கு மாநிலம் முழுவதும் உள்ள இந்த பேட்ச் போலீசார் சேர்ந்து தங்களால் ஆன நிதி சேகரித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கி வருகிறோம். இந்தநிலையில் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த சுரேந்திரன் கடந்த செப்டம்பர் 22-ந் தேதி உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு சக போலீசார் சார்பில் ரூ.13 லட்சத்து 92 ஆயிரம் நிதி சேகரித்து வழங்கினோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story