தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 12 பேருக்கு நிதியுதவி


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 12 பேருக்கு நிதியுதவி
x

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 12 பேருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு, தடியடி காரணமாக பலர் காயம் அடைந்தனர். இதனால் வழக்கமாக வேலை செய்ய முடியாமல் அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 12 பேருக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், முதல்கட்டமாக ஸ்டெர்லைட் நிறுவனம் தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கி உள்ளது.

இதனை பெற்றுக் கொண்ட பயனாளிகள், இந்த உதவித்தொகை வாழ்க்கைக்கு உதவியாக அமையும் என்று நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்த தகவல் ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story