மாணவர்களுக்கு நிதி உதவி


மாணவர்களுக்கு நிதி உதவி
x

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் அமைந்துள்ள நிடெக் இந்தியா ப்ரிசிசன் டூல்ஸ் நிறுவனம் சார்பில், ராணிப்பேட்டை, வாலாஜா, லாலாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இயக்குனர் (விற்பனை பிரிவு) என்.வள்ளியப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆர்.சங்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முனிடக்கா நவுரா கலந்து கொண்டு, 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.3,000, இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2,000 வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் எம்.ஏ.தனசேகரன் நன்றி கூறினார்.


Next Story