தந்தை இறந்த பின்பும் தேர்வு எழுதிய மாணவிக்கு நிதியுதவி


தந்தை இறந்த பின்பும் தேர்வு எழுதிய மாணவிக்கு நிதியுதவி
x

பரமக்குடியில் தந்தை இறந்த பின்பும் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவிக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடியில் சட்ட உரிமைகள் கழகத்தின் மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில இளைஞரணிச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் வரவேற்றார். நிறுவன தலைவர் செந்தில் செல்வானந்த் ஆலோசனை வழங்கி பேசினார். பின்பு பரமக்குடியில் தந்தை இறந்த பின்பும் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் பிளஸ்-2 தேர்வு எழுதி பின்பு இறுதிச் சடங்கு செய்த பள்ளி மாணவி சுரேகாவிற்கு ரூ.60 ஆயிரம் கல்வி நிதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜபருல்லாகான், மாநில புரவலர்கள் அமிர்தவல்லி, சதீஷ்குமார், அம்பிகா, மாநில இணைச் செயலாளர் கண்ணன், தொழிலாளர் அணி இணைச் செயலாளர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிரணி ஜோசப் விக்டோரியா ராணி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story