நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலைகள்ளக்காதல் விவகாரமா? போலீசார் விசாரணை


நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலைகள்ளக்காதல் விவகாரமா? போலீசார் விசாரணை
x

எருமப்பட்டி அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் விவகாரமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

எருமப்பட்டி

தனியாா் நிதி நிறுவன ஊழியர்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி ஊராட்சி மண் கரடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சசிகுமார் (வயது 27). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் நிதி வசூல் செய்யும் வேலை செய்து வந்தார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று சசிகுமார் மண் கரட்டில் இருந்து அலங்காநத்தம் செல்லும் சாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார்.

வெட்டிக்கொலை

இந்தநிலையில், அந்த பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சசிகுமாரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சசிகுமார் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். அந்தப்பகுதியாக சென்றவர்கள் சசிகுமார் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக அவரது வீட்டுக்கும், எருமப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி அந்தபகுதி மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்காதல் விவகாரமா?

மேலும் சசிகுமார் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு நாமக்கல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் சுரேஷ் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அப்போது நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பூர்ணிமா மற்றும் எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பூபதி, மதன்குமார் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சசிகுமார் கள்ளக்காதல் விவகாரத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் பிரச்சினையால் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

எருமப்பட்டி அருகே தனியார் நிதிநிறுவன ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story