கவுதாரி வேட்டையாடியவருக்கு அபராதம்


கவுதாரி வேட்டையாடியவருக்கு அபராதம்
x
தினத்தந்தி 10 Sept 2023 12:30 AM IST (Updated: 10 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி சேர்வராயன் வடக்கு வனச்சரக அலுவலர் பழனிவேல் தலைமையில் பிரிவு வனவர் ராகுல், வனகாப்பாளர்கள் அடங்கிய குழுவினர் சேலம் வனகோட்டம் சேர்வராயன் வடக்கு வனச்சரகம், பொம்மிடி பிரிவிற்குட்பட்ட நர்த்தன்சேடு வடக்கு பீட் மங்களக்கள் காப்புக்காட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வனத்துறையினரை கண்டு தப்பியோடியவரை வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் பி.பள்ளிப்பட்டியை சேர்ந்த சேகர் (வயது 52) என்பதும், அவர் அத்துமீறி வனப்பகுதியில் நுழைந்து வலை வைத்து கவுதாரி பிடித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு சேலம் மாவட்ட வனஅலுவலர் உத்தரவுபடி ரூ.7500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கவுதாரி பிடிக்க பயன்படுத்திய வலை பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story