உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 10 பள்ளி வாகனங்களுக்கு அபராதம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை


உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 10 பள்ளி வாகனங்களுக்கு அபராதம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 19 Jun 2023 7:00 PM GMT (Updated: 20 Jun 2023 4:29 AM GMT)
கிருஷ்ணகிரி

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின்பேரில், நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று துறையூர் சாலையில் பள்ளி வாகனங்களை சிறப்பு சோதனை செய்தனர். மொத்தமாக 30 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 10 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. குறிப்பாக அனுமதி சீட்டு இன்றி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் இருசக்கர வாகனங்களில் செல்போன் பேசியபடி சென்ற 3 வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது மொத்தம் 25 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, அரசுக்கு ரூ.50 ஆயிரம் வருவாய் ஈட்டப்பட்டது.


Next Story