முதுமலையில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்-வனத்துறை நடவடிக்கை


முதுமலையில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்-வனத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 6 July 2023 12:30 AM IST (Updated: 6 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்-வனத்துறை நடவடிக்கை

நீலகிரி


கூடலூர்


நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதைக் காண வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் காப்பகத்துக்கு உட்பட்ட சாலையில் வாகனத்தில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கு வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுத்து செல்கின்றனர். மேலும் பலர் வனத்துக்குள் அத்துமீறுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.


இதைத்தொடர்ந்து சிங்காரா வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மாவ நல்லா பகுதியில் உள்ள வனத்துக்குள் கேரளா, கர்நாடகாவை சேர்ந்த 12 சுற்றுலா பயணிகள் அத்துமீறி நுழைந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வனத்துக்குள் அத்து மீறி சென்ற சுற்றுலா பயணிகளுக்கு ரூ.4000 அபராதம் விதித்து வசூலித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, வனத்துக்குள் அத்துமீறி நுழைந்தால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அத்து மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்றனர்.



Next Story