தர்மபுரியில்தீ தொண்டு நாள் அனுசரிப்பு


தர்மபுரியில்தீ தொண்டு நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 15 April 2023 12:30 AM IST (Updated: 15 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி பல்வேறு தீயணைப்பு சம்பவங்களில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தர்மபுரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தர்மபுரியில் உள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்பாஸ் தலைமை தாங்கி பல்வேறு தீயணைப்பு சம்பவங்களில் உயிரிழந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் உதவி மாவட்ட அலுவலர் ஆனந்த் மற்றும் நிலைய அலுவலர்கள், நிலைய பணியாளர்கள், போக்குவரத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story