அந்தியூர் அருகே வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


அந்தியூர் அருகே வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x

அந்தியூர் அருகே வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிலிண்டரில் கியாஸ் தீர்ந்தது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மூன்றுரோடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் வீட்டில் விசைத்தறிக்கூடம் வைத்து நடத்தி வருகிறார். மேலும் இவர் தனது விசைத்தறியில் உற்பத்தி செய்த துணிகளை கடைகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருவார்.

அதேபோல் அவர் நேற்று அந்தியூரில் துணிகளை விற்றுவிட்டு் ஆம்னி வேனில் ஒலகடம் வழியாக மூன்றுரோடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். ஒலகடம் பேரூராட்சி அலுவலகம் அருகே சென்றபோது அவரது ஆம்னி வேனில் பொருத்தப்பட்டு இருந்த சிலிண்டரில் கியாஸ் தீர்ந்ததால் வேன் நின்றது. இதனால் அவர் ஆம்னி வேனில் இருந்து கீழே இறங்கினார்.

வேன் தீப்பிடித்தது

பின்னர் அதில் இருந்த காலியான கியாஸ் சிலிண்டரை அகற்றிவிட்டு வேறொரு சிலிண்டரை எடுத்து பொருத்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டது. பின்னர் ஆம்னி வேனில் இருந்து புைகயாக வந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்துசென்றனர். பின்னர் ஆம்னி வேனில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஆம்னி வேனில் எரிந்த தீ அணைக்கப்பட்டது. எனினும் ஆம்னி வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.

போக்குவரத்து பாதிப்பு

இதற்கிடையே தீ விபத்து நடந்த இடம் ஒலகடம்-பவானி ரோடு என்பதால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வெள்ளித்திருப்பூர் போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி, வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர்.

ஆம்னி வேனில் ஏற்பட்ட தீ விபத்தால் ஒலகடம்-பவானி ரோட்டில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story