மந்தாரக்குப்பம் அருகே கூரை வீடு எரிந்து சாம்பல்


மந்தாரக்குப்பம் அருகே  கூரை வீடு எரிந்து சாம்பல்
x

மந்தாரக்குப்பம் அருகே கூரை வீடு எரிந்து சாம்பலானது.

கடலூர்

மந்தாரக்குப்பம்,

மந்தாரக்குப்பம் அருகே வடக்குமேளூர் வன்னியர் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன். விவசாயி. நேற்று மாலை 5 மணிக்கு இவரது கூரை வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, வீட்டில் இருந்த ரங்கநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே ஓடிவந்தனர்.

சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரும் வெடித்து சிதறி, தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அருகில் இருந்த ஒரு மாட்டு கொட்டகையும் தீப் பற்றி எரிந்தது. தகவல் அறிந்த விருத்தாசலம் மற்றும் என்.எல்.சி. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

இதில் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் 5 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவை எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெய்சங்கர் நிவாரண பொருட்களை வழங்கினார்.


Next Story