பரமத்திவேலூர் அருகே தேங்காய் நார் மில்லில் தீ விபத்து ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்


பரமத்திவேலூர் அருகே  தேங்காய் நார் மில்லில் தீ விபத்து  ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
x

பரமத்திவேலூர் அருகே தேங்காய் நார் மில்லில் தீ விபத்து ஏற்பட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே தேங்காய் நார் மில்லில் தீ விபத்து ஏற்பட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

உயர் அழுத்த மின்கம்பி

பரமத்திவேலூர் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் செட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ராசப்பன் (வயது 50). இவர் அப்பகுதியில் தேங்காய் மட்டையில் இருந்து நார் தயாரிக்கும் நார் மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் தயாரிக்கப்பட்ட தேங்காய் நார்களை கொட்டி வைத்திருந்த இடத்தின் வழியாக உயர் அழுத்த மின்கம்பி சென்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென உயர் அழுத்த மின்கம்பி அறுந்து தேங்காய் நார்கள் மீது விழுந்ததில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

விசாரணை

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியாததால் நார்மில் உரிமையாளர் ராசப்பன் நாமக்கல் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு சென்ற நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சரவணன் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் தேங்காய் நாரில் பற்றி எரிந்த தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.

இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் ரூ.3 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story