மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து..!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையின் முதல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ அடுத்தடுத்து மற்ற கடைகள் மற்றும் வீடுகளுக்கும் பரவியுள்ளது. தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 5 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளில், கோயிலை சுற்றியுள்ள பழமையான கட்டடங்களில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். தரைத்தளத்தில் கடையும், மேல்தளத்தில் குடோனும் செயல்பட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story