மதுரை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தீ விபத்து...! பொங்கல் தொகுப்பு வேஷ்டி, சேலைகள் தீயில் எரிந்து நாசம்


மதுரை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தீ விபத்து...! பொங்கல் தொகுப்பு வேஷ்டி, சேலைகள் தீயில் எரிந்து நாசம்
x

பொங்கல் பண்டிகைக்காக கொடுக்க வைத்திருந்த இலவச வேட்டி சேலைகள் தீயில் எரிந்தது.

மதுரை,

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதில் பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய 29,000 சேலை, 19,000 வேட்டி தீயில் எரிந்து சேதமானது.

இந்த தீவிபத்து சம்பவம் மின்கசிவால் ஏற்பட்டது என தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story