பட்டாசு மூலப்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து


பட்டாசு மூலப்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து
x

சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி-சாத்தூர் ரோட்டில் கம்பி மத்தாப்பூகளுக்கு பயன்படுத்தப்படும் அலுமினிய பவுடர் உற்பத்தி செய்யும் நிறுவனம் உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் அலுமினிய பவுடர் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு இருந்த அலுமினிய பவுடர்கள் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story