துணை மின் நிலையத்தில் தீ விபத்து


துணை மின் நிலையத்தில் தீ விபத்து
x

துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதியில் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள துணை மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் நாட்டறம்பள்ளி பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து ‌ தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Next Story