கும்பகோணம் அருகே பட்டாசு தயாரிக்கும் கடையில் தீ விபத்து - ஒருவர் படுகாயம்


கும்பகோணம் அருகே பட்டாசு தயாரிக்கும் கடையில் தீ விபத்து - ஒருவர் படுகாயம்
x

விபத்தின் போது கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் ரவி என்பவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழங்கநத்தம் என்ற கிராமத்தில், வெடி கடை ஒன்றில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை தயாரிக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வந்துள்ளது. இந்த கடையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கிருந்த வெடி பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தின் போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் ரவி என்பவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து படுகாயமடைந்த ரவியை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாபநாசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story