சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
தீ விபத்தைத் தொடர்ந்து நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
சேலம்,
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவின் மேல்தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
படுத்த படுக்கையாக இருந்த நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாப்பேட்டை தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story