தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு வாரம்
தீ பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை தீயணைப்பு வீரர்கள் வழங்கினார்கள்.
செங்கல்பட்டு
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு வாரம் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீ விபத்தினை தடுக்க செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த துண்டு பிரசுரங்களை மகேந்திரா சிட்டி தீயணைப்பு நிலையம் சார்பில் நிலைய அலுவலர்கள் திருமலை, ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செட்டி புண்ணியம், திருத்தேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள வணிகர்கள், பொதுமக்களிடம் வழங்கி தீ பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர்.
Related Tags :
Next Story