தீயணைப்புத்துறையினர் செயல் விளக்க பயிற்சி


தீயணைப்புத்துறையினர் செயல் விளக்க பயிற்சி
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் தீயணைப்புத்துறையினர் செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் அவ்வப்போது குளிக்கும்போது சிலர் தவறி விழுந்து இறந்து விடுகின்றனர். எனவே இந்த குளத்தில் நீர் நிறைந்திருப்பதால் யாரும் குளிக்கவோ துவைக்க வேண்டாம் என விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய தகவல் பலகை குளத்தின் அருகே தீயணைப்பு துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும்சிலர் குளிக்கும் போது ஆபத்தில் மாட்டி கொண்டால் அவர்களை மீட்பது தொடர்பான செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து தீயணைப்பு துறை நிலைய அதிகாரிகள் குருசாமி, அந்தோணி ஆகியோர் கூறுகையில், இந்த குளத்தில் அடிக்கடி குளிக்க செல்பவர்கள் தவறி விழுந்து இறந்து விடுகிறார்கள். எனவே இந்த குளத்தில் நீர் நிரம்பி இருப்பதால் குளிக்கவோ, துவைக்கவோ வேண்டாம். மேலும் குளத்தில் ஆபத்தில் இருப்பவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தீயணைப்பு துறையின் சார்பில் செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.Next Story