தமிழகம் முழுவதும் 7,200 பட்டாசு கடைகளுக்கு தீயணைப்புத்துறை அனுமதி


தமிழகம் முழுவதும் 7,200 பட்டாசு கடைகளுக்கு தீயணைப்புத்துறை அனுமதி
x

தீபாவளி பண்டிகை வரும் 12-ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.

சென்னை,

நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். தங்களுக்கு தேவையான, புத்தாடைகள், பட்டாசுகளை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 7,200 பட்டாசு கடைகளுக்கு தீயணைப்புத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 890 கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் விதிகளை மீறி பட்டாசு கடைகள் செயல்பட்டால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் 42 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், கூடுதலாக பிற மாவட்டங்களில் இருந்து 26 தீயணைப்பு வாகனங்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் தீயணைப்புதுறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story