தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து
தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே கே.ராசியமங்கலத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவர் பாப்பான்விடுதி பஸ் நிறுத்தம் அருகில் தேங்காய் நார் தொழிற்சாலை வைத்துள்ளார். நேற்று நள்ளிரவு தேங்காய் நார் மட்டையில் தீப்பிடித்து மள மளவென பிடித்து தேங்காய் நார் எந்திரத்திலும் தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த நபர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story