புதுக்கோட்டையில் தைல மரக்காட்டில் தீ


புதுக்கோட்டையில் தைல மரக்காட்டில் தீ
x

புதுக்கோட்டையில் தைல மரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை

தைல மரக்காட்டில் தீ

புதுக்கோட்டை காமராஜபுரம் அருகே தைல மரக்காடு உள்ளது. வனத்தோட்ட கழகம் சார்பில் இந்த தைல மரங்கள் பராமரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மதியம் தைல மரக்காட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியினர் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குடியிருப்பு பகுதி அருகே உள்ள இந்த தைல மரக்காட்டில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் புகைமூட்டம் நிலவியது. தீயணைப்பு வீரர்களோடு பொதுமக்களும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.

வெயிலின் தாக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரக்காடுகள் அதிகம் உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிற போது அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. தைல மரக்காட்டில் மர்ம ஆசாமிகள் மது அருந்தும் போது சிகரெட் அல்லது தீக்குச்சிகளை கொளுத்தி போடுவதால் காய்ந்த சருகுகளில் எளிதில் தீப்பிடித்து விடுகிறது. இந்த தீ மளமளவென வேகமாக பரவிவிடுகிறது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் தீ மேலும் பரவிவிடுகிறது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story