சேலம் லைன்மேட்டில்பஞ்சு குடோனில் தீ விபத்து
அன்னதானப்பட்டி
சேலம் லைன்மேடு, பென்ஷன் லைன் நாகப்பன் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 45). இவர் அந்த பகுதியில் தலையணை, மெத்தை தயாரிக்கும் குடோன் வைத்துள்ளார். நேற்று மதியம் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை. இது குறித்து அவர்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர். இருந்த போதிலும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. தீயணைப்பு படையினர் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியந்தது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.