சேலத்தில் பரபரப்பு மொபட்டின் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றிய போது தீ விபத்து-வீட்டுக்குள் சிக்கிய 5 பேர் மீட்பு


சேலத்தில் பரபரப்பு மொபட்டின் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றிய போது தீ விபத்து-வீட்டுக்குள் சிக்கிய 5 பேர் மீட்பு
x

சேலத்தில் மொபட்டின் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றிய போது ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வீட்டுக்குள் சிக்கிய 5 பேர் மீட்கப்பட்டனர்.

சேலம்

சேலம்:

தனியார் நிதி நிறுவனம்

சேலம் டவுன் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 31). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டின் கீழ் தளத்தில் இருந்து, தனது மின்சார மொபட்டின் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றினார்.

அப்போது மின் கசிவு ஏற்பட்டு திடீரென பேட்டரி தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் வீட்டில் இருந்த கமலக்கண்ணன், இவருடைய மனைவி சாரதி, குழந்தை அர்ஜீனன், தந்தை பெரியசாமி, தாயார் சாந்தி ஆகிய 5 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கூச்சலிட்டபடி, அனைவரும் வீட்டின் முதல் மாடிக்கு சென்றனர்.

5 பேரை மீட்டனர்

இது குறித்து கமலக்கண்ணன், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கரும்புகையில் சிக்கிக்கொண்ட 5 பேரையும் மீட்டனர். தொடர்ந்து மின் கசிவு ஏற்பட்ட இடத்தில் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.


Next Story