நீலிவனநாதர் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை


நீலிவனநாதர் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை
x

நீலிவனநாதர் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

திருச்சி

தமிழகத்தில் நாளுக்கு நாள் பக்தர்கள் அதிகளவில் வரும் கோவில்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டாலோ, கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்களுக்கு மயக்கம் ஏற்பட்டாலோ எப்படி முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து இந்து சமய அறநிலை ஆட்சித் துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்படி 6 மாதத்திற்கு ஒருமுறை கோவில்களில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெறும். அதன்படி நேற்று மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. சமயபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமரன் தலைமையில், வீரர்கள் கோவில் செயல் அலுவலர் மனோகரன் முன்னிலையில் செய்து காட்டினர். இதில் கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.


Next Story