நாட்டறம்பள்ளி அருகே மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா


நாட்டறம்பள்ளி அருகே மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா
x

நாட்டறம்பள்ளி அருகே மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயனசெருவை அடுத்த மலையடிவாரம் பகுதியில் உள்ள நொண்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நேற்று மாலை தாரை தப்பட்டையுடன் சாமி ஊர்வலம் முக்கிய வீதிகளில் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. அதன் பிறகு பக்தர்கள் தீ மிதித்தல், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல், கரகம் எடுத்தல், நெஞ்சின் மீது உரல் வைத்து மஞ்சள் இடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு வாணவேடிக்கையுடன் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story