தீயணைப்பு வீரர்களின் விழிப்புணர்வு மினி மாரத்தான்


தீயணைப்பு வீரர்களின் விழிப்புணர்வு மினி மாரத்தான்
x

தீயணைப்பு வீரர்களின் விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெற்றது.

பெரம்பலூர்

தீ தொண்டு வாரத்தின் 4-வது நாளான நேற்று தீயணைப்பு வீரர்கள் சார்பில் பெரம்பலூரில் விழிப்புணர்வு மினி மாரத்தான் நேற்று நடந்தது. பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் முன்பு புறப்பட்ட மாரத்தானை மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் ஹக்கீம் பாஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிலைய அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார். இதில் தீயணைப்பு வீரர்கள் மாரத்தானில் கலந்து கொண்டு ஓடினர். அப்போது அவர்கள் பொதுமக்களிடம் தீ விபத்து ஏற்படாமல் இருப்பதும், விபத்து ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினர். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். மாரத்தான் பாலக்கரை ரவுண்டானா வழியாக வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குபேட்டை, கடைவீதி, பழைய பஸ் நிலையம் சென்று, காமராஜர் வளைவு வழியாக பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் வந்து, பின்னர் அங்கிருந்து தீயணைப்பு நிலையம் வந்து முடிவடைந்தது.


Next Story