டீசல் கொட்டிய சாலையில் தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்த தீயணைப்பு வீரர்கள்


டீசல் கொட்டிய சாலையில் தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்த தீயணைப்பு வீரர்கள்
x
தினத்தந்தி 6 Sept 2023 12:30 AM IST (Updated: 6 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை டேங்கர் லாரி கவிழ்ந்து டீசல் கொட்டியதால் சாலை யில் தண்ணீரை ஊற்றி தீயணைப்பு வீரர்கள் சுத்தம் செய்தனர்.

கோயம்புத்தூர்
வால்பாறை


வால்பாறை டேங்கர் லாரி கவிழ்ந்து டீசல் கொட்டியதால் சாலை யில் தண்ணீரை ஊற்றி தீயணைப்பு வீரர்கள் சுத்தம் செய்தனர்.


டீசல் டேங்கர் லாரி


கோவையை அடுத்த இருகூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து 12 ஆயிரம் லிட்டர் டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி வால்பாறை அரசு போக்குவரத்துக் கழக டெப்போவிற்கு புறப்பட்டது. அந்த டேங்கர் லாரி நேற்று முன்தினம் வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.


வழுவழுப்பான சாலை


இதனால் அந்த டேங்கர் லாரியில் இருந்து டீசல் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து சாலையில் வழிந்தோடியது. இதனால் அந்த சாலை முழுவதும் வழுவழுப்பாக மாறியது. இதன் காரணமாக அந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.


இதைத்தொடர்ந்து விபத்துக்கு உள்ளான லாரி, நேற்று அதி காலையில் கிரேன் உதவியுடன் எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டீசல் கொட்டிய இடத்தில் விபத்து ஏற்படாமல் தடுக்க காடம்பாறை போலீசார் தடுப்பு அமைத்து உள்ளனர்.


மேலும் அந்த வழியாக வாகனங்களை மெதுவாகவும் கவனமாகவும் செல்ல அறிவுறுத்தினர்.


தீயணைப்பு வீரர்கள்


எனவே வால்பாறை -பொள்ளாச்சி ரோடு வாட்டர்பால்ஸ் பஸ் நிறுத்தம் பகுதியில் இன்னும் சில நாட்களுக்கு வாகன ஓட்டிகள் ெமதுவாக செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.


நேற்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் டீசல் கொட்டிய சாலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர். இதனால் அந்த சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்றன.



Next Story