ஆட்டோ தொழிலாளர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம்
காரைக்குடியில் ஆட்டோ தொழிலாளர்களுக்கான இலவச முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது.
காரைக்குடி
காரைக்குடியில் ஆட்டோ தொழிலாளர்களுக்கான இலவச முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு பிரபு டென்டல் மருத்துவ குழுமத்தின் சேர்மன் துரை கருணாநிதி தலைமை தாங்கினார். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரபு விபத்துகளின் போது செய்ய வேண்டிய முதலுதவிகள் செய்யக்கூடாதவைகள் குறித்து விளக்கமளித்தார். பயிற்சி முகாமை மாங்குடி எம்.எல்.ஏ., காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தனர்.
பயிற்சி முகாமில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர் சிவப்பிரகாஷ் முதலுதவி பயிற்சிகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். அப்போது, அடிப்படைஉயிர்காக்கும் முதலுதவி சிகிச்சை, இதய நோய் விழிப்புணர்வு ஆலோசனை, விஷக்கடி பற்றிய விழிப்புணர்வு, சாலை விபத்தின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். பின்னர் ஆட்டோ தொழிலாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அவர்கள் விளக்கம் அளித்தனர். முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பிரபு டென்டல் மருத்துவ ஆராய்ச்சி மையம் செய்திருந்தது.