நீதிக்கட்சியின் தந்தை சர் பிட்டி தியாகராயர் பிறந்த நாளை ஒட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
நீதிக்கட்சியின் தந்தை சர் பிட்டி தியாகராயர் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை,
நீதிக்கட்சியின் தந்தை சர் பிட்டி தியாகராயர் பிறந்த நாளை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவீட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
"திராவிட வீரனே விழி, எழு, நட!" எனத் திராவிட இனத்தைத் தட்டியெழுப்பிய நீதிக்கட்சியின் தந்தை தியாகராயரின் பிறந்தநாள்! மாணவர்க்கு மதிய உணவு வழங்கி இன்று காலைச் சிற்றுண்டி வழங்கும் நமது திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் அவர்! அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து கொள்கை நடைபோடுவோம்! தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்போம்!
இவ்வாறு முதல் அமைச்சர் தனது டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story