திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தின் புதிய கட்டடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் ரூ. 110 கோடியில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை வந்திருந்தார். வழி நெடுகிலும் அவருக்கு திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

கலெக்டர் அமர் குஷ்வாஹா, தி.மு.க நிர்வாகிகள் புத்தகங்கள் மற்றும் சால்வை ஆகியவற்றை வழங்கி முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினை வரவேற்றனர். பின்னர் புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றினார் .

ரூ. 110 கோடியில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தில் 200 பேர் அமரும் வகையில் பெரிய கூட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 300 இருக்கைகள் கொண்ட குறை தீர்வுக் கூட்ட அரங்கமும், 3 சிறிய கூட்டரங்கங்களும், நீரூற்றுடன் கூடிய பூங்கா, மழைநீர் வடிகால் வசதிகளும்அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு, கலெக்டர் அமர்குஷ்வாஹா, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருப்பத்தூர் நகரமே இன்று காலை விழா கோலம் பூண்டிருந்தது.


Next Story