தென் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் சாலை, நேதாஜி சாலை, ஐந்து பர்லாங் சாலை உள்ளிட்ட 6 சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
சென்னை,
தென் சென்னையில் நடைபெற்று வரும் மருத்துவமனை வளாகம், மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, புதிய சாலை அமைக்கும் பணியினை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
ஆதம்பாக்கம், மணப்பாக்கம், கிங் மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த அவர், ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் சாலை, நேதாஜி சாலை, ஐந்து பர்லாங் சாலை உள்ளிட்ட 6 சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர். வரைபடம் மூலம் முதல் அமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர்
Related Tags :
Next Story