முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல மனிதர் - கவர்னர் ஆர்.என். ரவி புகழாரம்
அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் தனக்கு நல்ல உறவு உள்ளதாகவும், தனிப்பட்ட முறையில் அவர் நல்ல மனிதர் என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்..இதுதொடர்பாக ஆங்கில நாளேடு ஒன்றுக்கு ஆர்.என். ரவி அளித்துள்ள பேட்டியில், மு.க. ஸ்டாலினுக்கும் தனக்கும் இடையே நல்லுறவு நிலவுவதாகவும், மு.க. ஸ்டாலின் நல்ல மனிதர் என்றும், அவர் மீது தனக்கு மகுந்த மரியாதை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினும் தன் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், மாநில அரசின் செயல்பாடுகளில் தான் தலையிடவில்லை என்றும், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
மாநில கவர்னர்களை மத்திய அரசு, அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளிக்க மறுத்துவிட்டார்.