தமிழகத்தில் முதல் முறையாக தானியங்கி மதுபான விற்பனை தொடக்கம்


தமிழகத்தில் முதல் முறையாக தானியங்கி மதுபான விற்பனை தொடக்கம்
x

சென்னை கோயம்பேட்டில் தானியங்கி மதுபான விற்பனை மையத்தை டாஸ்மாக் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செயும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏ.டி.எம். இயந்திரம் போல் செயல்பட்டு மது மற்றும் பீர் வகைகளை விநியோகம் செய்ய பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் உள்ள தொடுதிரை மூலம் தேவையான மதுபான வகையை தேர்வு செய்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தினால், தானாக மதுபானம் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story