கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு முதல் பெண் நீதிபதி நியமனம்


கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு முதல் பெண் நீதிபதி நியமனம்
x
தினத்தந்தி 23 Aug 2023 1:30 AM IST (Updated: 23 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு முதல் பெண் நீதிபதி நியமிக்கப்பட்டார்.

கோயம்புத்தூர்

கோவை


கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வந்தவர் ராஜசேகர். இவர் பதவி உயர்வு பெற்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் டான்பிட் கோர்ட்டு நீதிபதி செந்தில்குமாருக்கு, மாவட்ட முதன்மை நீதிபதியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டு புதிய நீதிபதியாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றிய ஜி.விஜயா நியமிக்கப்பட்டு உள்ளார்.


கோவை மாவட்ட கோர்ட்டு தோற்றுவிக்கப்பட்டு 1880-ம் ஆண்டுகளில் இருந்து இதுவரை மாவட்ட முதன்மை நீதிபதியாக பெண் நீதிபதி ஒருவர் கூட நியமிக்கப்பட வில்லை. தற்போது அந்த பெருமையை கோவை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப் பட்டு உள்ள ஜி.விஜயா பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story