கண்மாயில் மீன்பிடி திருவிழா


கண்மாயில் மீன்பிடி திருவிழா
x

திருப்பத்தூர் அருகே பிராமணப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே பிராமணப்பட்டி கண்மாயில் மீன்பிடித்திருவிழா நடைபெற்றது.

துண்டுபிரசுரம்

திருப்பத்தூர் அருகே உள்ள பிராமணப்பட்டி ஊராட்சியில் உள்ள பிராமணக்கண்மாயில் நேற்று மீன்பிடித்திருவிழா நடைபெறுவதாக துண்டுபிரசுரம் மூலம் அறிவிக்கப்பட்டு உருந்தது.

அதன்படி காலை 7.30 மணி அளவில் ஊர் அம்பலக்காரர் கொடி அசைக்க கண்மாயை சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உத்தா, மீன்பிடிக்கூடை மற்றும் மீன்பிடி வலைகளுடன் கண்மாயிக்குள் இறங்கி துள்ளிய மீன்களை அள்ளினர்.

பலவகை

இதில் விராமீன், கட்லா, கெளுத்தி, குரவை, ஜல்லிக ்கெண்டை உள்ளிட்ட பலவகை மீன்கள் பிடித்து மகிழ்ந்தனர். பிராமணப்பட்டி, குண்டேந்தல்பட்டி, மேலையான்பட்டி, சுண்ணாம்பிருப்பு, நாட்டரசங்கோட்டை, கருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவிழாவில் கலந்துகொண்டனர்.

சிறியவர்களும் பெரிய வர்களும் போட்டி போட்டு கையில் சிக்கிய மீன்களை பிடித்து சென்றனர்.

1 More update

Next Story