கொண்டிசெட்டிப்பட்டி குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு


கொண்டிசெட்டிப்பட்டி குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மோகனூர் சாலை கொண்டிசெட்டிப்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான 17.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் அமைந்து உள்ளது. இந்த குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு, குளத்தை சுற்றியும் பாதை அமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து குளத்தில் கெண்டை, கெளுத்தி, கட்லா உள்ளிட்ட மீன் வகைகள் மற்றும் வாத்துகள் நகராட்சி சார்பில் விடப்பட்டது. இந்த குளம், மழை காலத்தில் நிரம்பி, சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி வந்தது.

இந்தநிலையில் கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி, கே.கே.நகர், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குளத்தில் கலக்கிறது. அதனால் நேற்று குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதந்தன. மீன்கள் செத்து மிதப்பதாலும், கழிவுநீர் கலப்பதாலும் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேட்டை கருத்தில் கொண்டு, குளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story