அவினாசிலிங்கேசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் நேற்று முதல் மீன்பிடித்தப்பட்டது.
அவினாசிலிங்கேசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் நேற்று முதல் மீன்பிடித்தப்பட்டது.
அவினாசி
அவினாசிலிங்கேசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் நேற்று முதல் மீன்பிடித்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி உயிருடன் மீட்டது போன்ற புகழ்பெற்ற ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது இந்த கோவில் வளாகத்தில் பிரசித்தி பெற்ற தெப்பக்குளம் உள்ளது இந்த தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது தெப்பத்தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெறும் தெப்பக்குளத்தில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது தற்போது குளத்தில் மீன்கள் அதிக அளவு உற்பத்தி ஆனதால் மீன்களை பிடிக்க கோவில் நிர்வாகத்தின் மூலம் நேற்று முன்தினம் ஏலம் நடந்தது. இதில் ரூ 15 ஆயிரத்திற்கு ஏலம் கோரிய நபருக்குமீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து ஏலம் கோரிய நபர்கள் நேற்று தெப்பக்குளத்திலவலைவிரித்துமீன்பிடிக்க தொடங்கினர். இதில் ஜிலேபி, நெய், கெளுத்தி உள்ளிட்ட பலரக மீன்கள் பிடிபட்டது.நேற்று முதல் 15 நாட்களுக்கு மீன்பிடிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
----------------