குளச்சல் கடலில் மாயமான மீனவரை தேடும் பணி தீவிரம்...!


குளச்சல் கடலில் மாயமான மீனவரை தேடும் பணி தீவிரம்...!
x

குளச்சல் கடலில் மாயமான மீனவரை 3 நாளாக மரைன் போலீசார் மற்றும் உறவினர்கள் தேடிவருகின்றனர்.

குளச்சல்,

குமரி மாவட்டம் குளச்சல் அருகே மேல குறும்பனையை சேர்ந்தவர் தேவதாசன் ஸ்ரீ(40). குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் இவர் மீன்பிடித்தொழில் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் பகல் இவர் வலையை கடலில் வீசிவிட்டு இரவு வழக்கம்போல் வலையை இழுக்க சென்றார். அப்போது சாப்பிட்டுவிட்டு கையை கடல்நீரில் கழுவும்போது நிலை தடுமாறி விழுந்தார்.

அப்போது எழுந்த அலையில் அவர் சிக்கி இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது உறவினர்கள் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மீனவர் தேவதாசனை தொடர்ந்து 3 நாளாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் மாயமான மீனவர் அணிந்திருந்த உடை இன்று காலை கரை ஒதுங்கியது. இந்த சம்பவம் மீனவர் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Related Tags :
Next Story